/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'இங்கு குப்பை கொட்டக் கூடாது' பள்ளப்பட்டி நகராட்சிக்கு எச்சரிக்கை 'இங்கு குப்பை கொட்டக் கூடாது' பள்ளப்பட்டி நகராட்சிக்கு எச்சரிக்கை
'இங்கு குப்பை கொட்டக் கூடாது' பள்ளப்பட்டி நகராட்சிக்கு எச்சரிக்கை
'இங்கு குப்பை கொட்டக் கூடாது' பள்ளப்பட்டி நகராட்சிக்கு எச்சரிக்கை
'இங்கு குப்பை கொட்டக் கூடாது' பள்ளப்பட்டி நகராட்சிக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 05:03 AM
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி, மேற்கு தெரு அருகே, நங்காஞ்சி ஆறு அணைக்கட்டு அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் நகராட்சி, இந்த ஆற்றின் ஓரம் கொட்டி வைக்கின்றனர். இதனால், அப்பகு-தியில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்-பட்டுள்ளது.
மேலும், மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் நிரம்பி ஊருக்குள் புகும் போது, குப்பைகளும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடு-கின்றன. தினந்தோறும், டிராக்டர் மூலம் குப்பையை சேகரித்து கொண்டுவந்து இங்கு கொட்டப்படுவதால், மலைபோல் குப்பை குவிந்துள்ளது.
இதற்கு, அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, நக-ராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தொடர்ந்து குப்பை கொட்டுவதால் ஆவேசமடைந்த மேற்கு தெரு பகுதி பொதுமக்கள், குப்பை கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்து ஆற்றுக்குள் செல்லாதவாறு எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து திரும்பி சென்றனர்.