/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சின்னதாராபுரத்தில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம் சின்னதாராபுரத்தில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
சின்னதாராபுரத்தில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
சின்னதாராபுரத்தில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
சின்னதாராபுரத்தில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
ADDED : மார் 26, 2025 01:56 AM
சின்னதாராபுரத்தில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பில், சின்னதாராபுரம் பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2024-25ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ், சாலை சந்திப்புகளை மேம்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், சின்னதாராபுரம் பகுதியில் கடந்த, 10 நாட்களாக சாலை அகலப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட கரூரிலிருந்து தாராபுரம் வழியாக, பொள்ளாச்சி செல்லும் 93 கி.மீ., துாரமுள்ள சாலை மற்றும் சின்னதாராபுரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் உள்ள சாலை சந்திப்பை, 2024-25ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.