/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலர்கள் மோதிய விபத்தில்வாலிபர் பலி: 3 பேர் காயம் டூவீலர்கள் மோதிய விபத்தில்வாலிபர் பலி: 3 பேர் காயம்
டூவீலர்கள் மோதிய விபத்தில்வாலிபர் பலி: 3 பேர் காயம்
டூவீலர்கள் மோதிய விபத்தில்வாலிபர் பலி: 3 பேர் காயம்
டூவீலர்கள் மோதிய விபத்தில்வாலிபர் பலி: 3 பேர் காயம்
ADDED : மார் 26, 2025 01:56 AM
டூவீலர்கள் மோதிய விபத்தில்வாலிபர் பலி: 3 பேர் காயம்
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, இரண்டு டூவீலர்கள் மோதிக்கொண்டதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், வேலுார் பொன் நகரை சேர்ந்தவர் இளங்கோ மணிகண்டன், 29; இவர் நேற்று முன்தினம் மாலை, நண்பர் நந்தகுமார், 29; என்பவருடன், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மலையம்பாளையம் பகுதியில், டி.வி.எஸ்., ஜூபிடர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கோகுல், 30; என்பவர், அவரது தம்பி கவுதம், 26; என்பவருடன், ஹீரோ ேஹாண்டா டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இரண்டு டூவீலர்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில், நான்கு பேரும் கீழே விழுந்தனர். அதில், தலையில் படுகாயமடைந்த நந்தகுமார், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும், காயம் ஏற்பட்டது.
வேலாயுதம்பாளையம் போலீ சார் விசாரிக்கின்றனர்.