/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க3,015 பேருக்கு மானியம் வழங்கல் பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க3,015 பேருக்கு மானியம் வழங்கல்
பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க3,015 பேருக்கு மானியம் வழங்கல்
பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க3,015 பேருக்கு மானியம் வழங்கல்
பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க3,015 பேருக்கு மானியம் வழங்கல்
ADDED : மார் 26, 2025 01:56 AM
பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க3,015 பேருக்கு மானியம் வழங்கல்
கரூர்:பசுந்தாள் உர விதைகள் தயாரிக்க, 3,015 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் பகுதியில் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், மண்புழு உரம் தயாரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:தற்போதுள்ள தொழில்முறை வேளாண்மையில், ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிகளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளமும் நலமும் குன்றியுள்ளன. நிலங்கள் பாழ்பட்டு அதிகளவில் களர், உவர், அமில நிலங்களாக மாறியுள்ளன.
வேதிப்பொருட்களின் எச்சம் இல்லாத, வேளாண் விளை பொருட்களே நமக்கு நல்லுணவு, உடல் நலன் காக்கும். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், பசுந்தாள் உர விதைகள், 50 சதவீத மானியத்தில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 3,015 விவசாயிகளுக்கு, 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், ஒரு இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிக்கும் மையம் அமைக்க, 1 லட்சம் ரூபாய் மானியத்தில் மூன்று இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிக்கும் மையம் அமைக்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் உடனிருந்தார்.