/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒட்ட முயற்சி; பா.ஜ.,வினர் 20 பேர் கைது ஒட்ட முயற்சி; பா.ஜ.,வினர் 20 பேர் கைது
ஒட்ட முயற்சி; பா.ஜ.,வினர் 20 பேர் கைது
ஒட்ட முயற்சி; பா.ஜ.,வினர் 20 பேர் கைது
ஒட்ட முயற்சி; பா.ஜ.,வினர் 20 பேர் கைது
ADDED : மார் 26, 2025 01:56 AM
ஒட்ட முயற்சி; பா.ஜ.,வினர் 20 பேர் கைது
அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில், டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற, 20 பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மாநிலம் முழுதும், 4,830 சில்லரை மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு, தி.மு.க.,வினர் நடத்தி வரும் ஆலைகளில் இருந்து, மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஆலைகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள அரசு மதுபான ஆலை தலைமை அலுவலகத்தை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த, 17ல் முற்றுகையிட முயன்றார். அவரை போலீசார் தடுத்து கைது செய்தனர். அப்போது அவர், ஒவ்வொரு மதுபான கடை முன், மதுபான ஊழல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய போட்டோ ஒட்டப்படும் என, அறிவித்தார்.
அதன்படி கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் அரவக்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் படத்தை ஒட்டுவதற்காக, க.பரமத்தி தெற்கு ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமையில் சென்றனர். பா.ஜ., நிர்வாகிகளை வழியிலேயே தடுத்து நிறுத்தி சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர். இதில் ஐந்து பெண்கள் உள்பட, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.