/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ பஸ்சில் செயின் பறிப்பு திண்டுக்கல் பெண் கைது பஸ்சில் செயின் பறிப்பு திண்டுக்கல் பெண் கைது
பஸ்சில் செயின் பறிப்பு திண்டுக்கல் பெண் கைது
பஸ்சில் செயின் பறிப்பு திண்டுக்கல் பெண் கைது
பஸ்சில் செயின் பறிப்பு திண்டுக்கல் பெண் கைது
ADDED : ஜூலை 06, 2024 02:41 AM

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே கீழ ராமன் புதுாரை சேர்ந்தவர் சுசீலா 67. நேற்று காலை திங்கள் சந்தையில் உள்ள மகள் வீட்டுக்கு செல்வதற்காக செட்டிகுளத்தில் இருந்து திங்கள் சந்தை செல்லும் பஸ்சில் ஏறினார். சிறிது துாரம் சென்றதும் பஸ்சில் இருந்த நெரிசலை பயன்படுத்தி சுசீலா கழுத்தில் கடந்த மூன்று பவுன் நகையை ஒரு பெண் நைசாக அறுத்து எடுத்தார்.
இதை பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பயணி சுசீலாவிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே கண்கார்டியா நிறுத்தத்தில் பஸ் நின்றது. அப்போது நகையை பறித்த பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் இறங்கி ஓடினர். அதில் ஒரு பெண் அவ்வழியாக வந்த ஆட்டோவில் லிப்ட் கேட்டு தப்பிச் செல்ல முயன்ற போது உஷாரான ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்த போது மூதாட்டியிடம் நகை பறித்து விட்டு சென்றது தெரியவந்தது.
அப்பகுதியில் கூடி நின்றவர்கள் பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து நகையை மீட்டனர். நேசமணி போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போதுதிண்டுக்கல் மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இசக்கி அம்மாள் 38, என்பது தெரியவந்தது. அவருடன் வந்த பெண்ணை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.