/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ துப்பாக்கியால் மிரட்டி 94 சவரன் நகை பறிப்பு துப்பாக்கியால் மிரட்டி 94 சவரன் நகை பறிப்பு
துப்பாக்கியால் மிரட்டி 94 சவரன் நகை பறிப்பு
துப்பாக்கியால் மிரட்டி 94 சவரன் நகை பறிப்பு
துப்பாக்கியால் மிரட்டி 94 சவரன் நகை பறிப்பு
ADDED : ஜூலை 05, 2024 09:48 PM
நாகர்கோவில்:நாகர்கோவில் எஸ்.பி., அலுவலக ரோட்டைச் சேர்ந்தவர் நாகராஜன், 40. இவர், கன்னியாகுமரி மாவட்டத்தில், 10 இடங்களில், வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். திங்கள் சந்தை அருகே மேக்கோடு பழவண்டான் கோணத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவர் மனைவி ஜானு ஸ்ரீ. இவர்கள் திங்கள் சந்தையில் உள்ள ஒரு வங்கியில், 94 சவரன் நகை அடகு வைத்திருந்தனர். அந்த நகையை திருப்ப முடியாததால், நாகராஜனை அணுகினர்.
அவர் 40 லட்சம் ரூபாய் செலுத்தி, நகைகளை மீட்டு, தன் நிறுவனத்தில் வைத்திருந்தார். பணம் வரும்போது நகையை மீட்டுக் கொள்வதாக ஜானு ஸ்ரீ கூறி இருந்தார். நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.
இந்நிலையில், சுசீந்திரம் பகுதியில் ஒரு இடத்தைக் கூறி, அங்கு வந்து பணத்தை பெற்று, நகையை பெற்றுக் கொள்வதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். நாகராஜன் அங்கு சென்றபோது, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து, துப்பாக்கியை நெற்றியில் வைத்து நகையை கேட்டு மிரட்டியது. நகையை அவர்களிடம் கொடுத்து விட்டு, நாகராஜன் திரும்பி வந்தார். தன்னிடம் நகையை பறித்த கும்பல் குறித்து, எஸ்.பி., அலுவலகத்தில் நாகராஜன் புகார் அளித்துள்ளார். சுசீந்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.