/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மாயமானவர் 22 ஆண்டுக்கு பின் கைது நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மாயமானவர் 22 ஆண்டுக்கு பின் கைது
நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மாயமானவர் 22 ஆண்டுக்கு பின் கைது
நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மாயமானவர் 22 ஆண்டுக்கு பின் கைது
நாகர்கோவில் ரவுடி கொலை வழக்கில் மாயமானவர் 22 ஆண்டுக்கு பின் கைது
ADDED : ஜூலை 04, 2024 11:22 PM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் கோஷ்டி மோதலும், கொலைகளும், 2000ம் ஆண்டில் அதிக அளவில் நடந்தன. நாகர்கோவில் மத்திய சிறைக்குள் ரவுடி லிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதே ஆண்டில், புத்தேரி ரவுடி நாகராஜனை ஒரு கும்பல் கடத்திச் சென்று, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே தலையில் வெட்டி கொலை செய்தனர். அதேபோல, 2001ல் நாகராஜனின் சகோதரர் ரமேஷையும் கொலை செய்தனர்.
இவ்வழக்கில் நாகர்கோவில் தேரேகால்புதுார் நாஞ்சில் நகரைச் சேர்ந்த கணேசன் என்ற வெள்ளை கணேசனை, வடசேரி போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த அவர், 2002 மார்ச்சில் மாயமானார். அதன்பிறகு, அவரை போலீசார் தேடியும், கிடைக்கவில்லை. இதனால், அவரை தேடுவதையே சில ஆண்டுகளில் போலீசார் கைவிட்டனர்.
இந்நிலையில், பழைய வழக்குகளை துாசி தட்டி எடுக்க, போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கணேசனை போலீசார் தேடி வந்தனர்.
அவர், நாகர்கோவிலில் இருந்து தப்பிச் சென்று, சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அதன்பின், போலீசார் தன்னை தேடுவதைக் கைவிட்டு விட்டதை உறுதிப்படுத்தினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரிக்கு சென்ற அவர், அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.
பின், புதுச்சேரிக்கு சென்ற அவர், போலீசார் தன்னை இனிமேல் பிடிக்க மாட்டார்கள் எனக் கருதி, அங்கு பழக்கடை நடத்தி வந்தார்.
இதை சில தகவல்கள் மூலம் அறிந்த போலீசார், புதுச்சேரி சென்றனர். அவர் தான், நாகர்கோவிலில் நடந்த கொலையில் தொடர்புடையவர் என்பதை உறுதிப்படுத்திய பின், கைது செய்து, நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வரும் 16 வரை காவலில் வைக்க, நடுவர் உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.