/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 06, 2024 02:45 AM
நாகர்கோவில்:மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மயிலாடி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரவி. இவருக்கும்சுசீந்திரம் அருகே புத்தளத்தைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் 2011 மே மாதம் திருமணம் நடைபெற்றது. ஒன்றரை ஆண்டுகள் முடிந்த நிலையில் வீட்டில் விஜி தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் ரவி அதிக வரதட்சணை கேட்டு விஜியை கொடுமைப்படுத்தியதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணை நடத்திய நாகர்கோவில் விரைவு மகிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி சுந்தரைய்யா, ரவிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.