/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு
குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு
குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு
குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2024 09:16 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கிறது. வழக்கமாக காலை 8:00 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும் .
இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலை நேரத்தில் கடல் நீர் குறைந்து பாறைகள் வெளியே தெரிகிறது. காலை 10:00 மணிக்கு பின்னர் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து படகு இயக்கும் அளவுக்கு நிலைமை சீராகிறது.
இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் காலை 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 10:00 மணிக்கு பின்னர் தொடங்கியது. அதிகாலை முதலே இதற்காக வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொதுவாக அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் தான் என்று இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.