Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ ஆடிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 15 ல் திறப்பு

ஆடிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 15 ல் திறப்பு

ஆடிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 15 ல் திறப்பு

ஆடிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 15 ல் திறப்பு

ADDED : ஜூலை 09, 2024 10:22 PM


Google News
நாகர்கோவில்:ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக ஜூலை 15 ல் திறக்கப்படுகிறது. ஜூலை 20 வரை பூஜைகள் நடைபெறும்.

எல்லா தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் பூஜைகள் நடைபெறும். இதற்காக அதற்கு முந்தைய மாதம் கடைசி நாளில் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் ஆடி 1 ஜூலை 17-ல் வருகிறது. ஆனால் கேரளாவில் ஜூலை 16 -ல் ஆடி 1. இதனால் சபரிமலை நடை ஜூலை 15 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஜூலை 16 அதிகாலை 5:00 க்கு நடை திறக்கப்பட்டதும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை, இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு.

ஜூலை 20 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தேதிகளை கவனத்தில்கொள்ள வேண்டும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us