/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ குமரி பகவதி அம்மன் கோயில் தேருக்கு ரூ.13.5 லட்சத்தில் கண்ணாடி இழை கூண்டு குமரி பகவதி அம்மன் கோயில் தேருக்கு ரூ.13.5 லட்சத்தில் கண்ணாடி இழை கூண்டு
குமரி பகவதி அம்மன் கோயில் தேருக்கு ரூ.13.5 லட்சத்தில் கண்ணாடி இழை கூண்டு
குமரி பகவதி அம்மன் கோயில் தேருக்கு ரூ.13.5 லட்சத்தில் கண்ணாடி இழை கூண்டு
குமரி பகவதி அம்மன் கோயில் தேருக்கு ரூ.13.5 லட்சத்தில் கண்ணாடி இழை கூண்டு
ADDED : ஜூலை 09, 2024 09:12 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தேரை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் 13 லட்சம் ரூபாய் செலவில் கண்ணாடி இழை கூண்டு அமைக்கப்படுகிறது.
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். வைகாசி மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். சிறந்த கலையம்சங்களுடன் கூடிய இந்த தேர் தேரோட்டம் முடிந்ததும் தகரக் கொட்டகைக்குள் மூடப்பட்டு விடும். இதனால் இந்த தேரை திருவிழா அல்லாத காலங்களில் பக்தர்கள் பார்வையிட முடியாத நிலை இருந்தது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற கன்னியாகுமரியில் அவர்களும் இந்த தேரை பார்க்க வசதியாக கண்ணாடி இழை கூண்டு அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கூண்டு அமைப்பதற்கு அரசு 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அனுமதி அனுமதித்துள்ளது. கடற்கரை ஓரம் என்பதால் உப்பு காற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நவீன தொழில்நுட்பமும் இந்த கண்ணாடி இழை கூண்டில் பயன்படுத்தப்படுகிறது,
இந்தப் பணி நேற்று தொடங்கியது. இதில் தேவசம் போர்டு தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.