ADDED : மே 21, 2025 08:07 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு ரைஸ் மில் அருகே, சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீசார் ரோந்து பணயில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 20. மற்றும் மளிகை தெருவைச் சேர்ந்த மாதவன், 20. ஆகிய இருவரையும் போலீசார் சோதனை செய்தனர்.
இருவரிடமும் 1,800 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.