ADDED : மே 21, 2025 08:07 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கம் கிராமம், ஒத்தவாடை தெரவைச் சேர்ந்தவர் கருணாகரன், 55. இவருக்கு, மதுப்பழக்கம் உள்ளது. கூலி வேலை செய்து வந்த இவர், கடந்த 19ம் தேதி வெளியே செல்வதாக கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், கீழ்கதிர்பூர் கிராமம், அரசு குடியிருப்பு அருகே உள்ள சிறிய நீர் குட்டையில், நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாலுச்செட்டிசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு, நடத்திய விசாரணையில் அவர், கருணாகரன் என்பது தெரியவந்தது. அவரது உயிரிழப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.