/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கட்டவாக்கத்தில் சாலையோர நெல் குவியலால் விபத்து அபாயம் கட்டவாக்கத்தில் சாலையோர நெல் குவியலால் விபத்து அபாயம்
கட்டவாக்கத்தில் சாலையோர நெல் குவியலால் விபத்து அபாயம்
கட்டவாக்கத்தில் சாலையோர நெல் குவியலால் விபத்து அபாயம்
கட்டவாக்கத்தில் சாலையோர நெல் குவியலால் விபத்து அபாயம்
ADDED : செப் 21, 2025 01:10 AM

வாலாஜாபாத்:கட்டவாக்கம் சாலையோரத்தில் ஆங்காங்கே கொட்டி வைத்துள்ள நெல் குவியலால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாதில் இருந்து, பல்வேறு கிராமங்கள் வழியாக ,சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இச்சாலை வழியை பயன்படுத்தி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கட்டவாக்கத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு அறுவடையான நெல்லை அப்பகுதி விவசாயிகள் சாலையோரத்தில் குவியலாக கொட்டி வைத்து, ஓரு சில தினங்களுக்கு பின், அதே பகுதியில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏற்றி செல்கின்றனர்.
அங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால் சாலையில் கொட்டி வைக்கின்றனர்.
கட்டவாக்கம் அடுத்த, தென்னேரி, மஞ்சமேடு, குண்ணம் உள்ளிட்ட கிராமங்களிலும் சாலை ஓரங்களில் நெல் கொட்டி வைப்பது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு சாலையை ஆக்கிரமித்து நெல் கொட்டி வைப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையில் கொட்டப்பட்டுள்ள நெல் குவியலை அகற்றுவதோடு, நெல் குவிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.