/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் வாகனங்கள் தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
தேரடியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
ADDED : செப் 21, 2025 01:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தேரடி ஆஞ்சநேயர் கோவில் அருகில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சனிக்கிழமைகளில் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவில் அருகில் மண்பாண்டம், பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகாரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடத்தில், ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையப் பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால், காந்தி சாலை, தேரடி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் தேரடி அருகில் உள்ள மண்பாண்டம், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் ஆக்கிரமிப்பு கடைகளை இடையூறு இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்யவும், போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையில் மையப் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது, விஷ்ணு காஞ்சி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.