/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கோரைப்புல் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 13, 2025 01:54 AM

காஞ்சிபுரம்:கோரைப்புல் வளர்ந்துஉள்ள காஞ்சிபுரம் தும்பவனம் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றம், கலெக்ட்ரேட் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர், தும்பவனம் கால்வாய் வாயிலாக வெளியேறி வேகவதி ஆற்றில் கலக்கிறது.
இக்கால்வாயில் கோரைப்புற்கள் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதியை சூழும் நிலை ஏற்படும்.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தும்பவனம் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.