/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சொர்ணவாரி பருவத்திற்கு நெல் நடவு பணியில் விவசாயிகள் சொர்ணவாரி பருவத்திற்கு நெல் நடவு பணியில் விவசாயிகள்
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் நடவு பணியில் விவசாயிகள்
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் நடவு பணியில் விவசாயிகள்
சொர்ணவாரி பருவத்திற்கு நெல் நடவு பணியில் விவசாயிகள்
ADDED : ஜூன் 13, 2025 01:53 AM

வாலாஜாபாத்:சொர்ணவாரி பருவத்திற்கான நெல் நடவு சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட துவங்கி உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏரி, கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக, சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும் அதிகம் நெல் பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஆண்டு பருவ மழையை தொடர்ந்து, நெல் பயிரிட்ட விவசாயிகள், இரண்டு மாதங்களாக அறுவடை பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அறுவடை பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தற்போது அடுத்தகட்ட சொர்ணவாரி பருவத்திற்கான சாகுபடி பணிகளை துவங்கி உள்ளனர்.
தென்னேரி, அயிமிச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு வாயிலாக விவசாயிகள் சாகுபடி பணி மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், லிங்காபுரம், சங்கராபுரம், தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், நல்லுார், வாரணவாசி, தோண்டாங்குளம், தொள்ளாழி, கொசப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சொர்ணவாரி சாகுபடிக்கு நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.