Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வஞ்சுவாஞ்சேரி ஏரியில் குவியும் பிளாஸ்டிக் குப்பையால் சுகாதார சீர்கேடு

வஞ்சுவாஞ்சேரி ஏரியில் குவியும் பிளாஸ்டிக் குப்பையால் சுகாதார சீர்கேடு

வஞ்சுவாஞ்சேரி ஏரியில் குவியும் பிளாஸ்டிக் குப்பையால் சுகாதார சீர்கேடு

வஞ்சுவாஞ்சேரி ஏரியில் குவியும் பிளாஸ்டிக் குப்பையால் சுகாதார சீர்கேடு

ADDED : ஜூன் 16, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:வஞ்சுவாஞ்சேரி ஏரியில் கொட்டப்பட்டு குவியலாக உள்ள பிளாஸ்டிக் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட, வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுபாட்டின்கீழ் ஏரி அமைந்துள்ளது.

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையோரம் உள்ள இந்த ஏரி, அப்பகுதியினரின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஏரி பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

வஞ்சுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து, இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பை கொண்டு வந்து ஏரியில் கொட்டப்படுகிறது.

இதனால், ஏரி மாசடைந்து வருகிறது. மேலும், மழை பெய்யும் போது, இந்த குப்பை, ஏரி நீரில் கலப்பதால், ஏரிநீர் பாதிப்படையும் சூழல் உள்ளது. மேலும், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுத்து, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையோரம் உள்ள ஏரியில் பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us