/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 07, 2025 10:13 PM
காஞ்சிபுரம்:பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோரின் பொருளாதாரம் மேம்படுத்தும் நோக்கில் கடனுதவி வழங்கி வருகிறது.
இந்த விண்ணப்பதாரர்களின் குடும்பத்தினரின் வருவாய் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
கடன் பெற விரும்புவோர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.tabcedco.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜாதி, வருமானம், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.