Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 07, 2025 10:14 PM


Google News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு, மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, 252 ஏக்கர் பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

இதுவரை இத்திட்டத்தில் பயன் பெறாத விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 47 ஏக்கர் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகள் சிட்டா, ஆதார் கார்டு, அடங்கல், பேங்க் பாஸ்புக், மூன்று புகைப்படம், ரேஷன் கார்டு நகல், சிறு, குறு விவசாய சான்று, எப்.எம்.பி., போன்ற ஆவணங்களை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்யலாம்.

மேலும், உத்திரமேரூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இத்தகவலை, வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us