/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 06, 2025 08:25 PM
காஞ்சிபுரம்:பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன.
நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 மற்றும் கல்லுாரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரி படிக்கும் மாணவ - -மாணவியர் இந்த விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் சேர விரும்பும் மாணவ- - மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விடுதிக்கும், கல்வி பயிலும் இடத்திற்கும் 8 கி.மீ., மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், விடுதி காப்பாளர்களிடம் ஜூன் -18ம் தேதிக்குள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை- 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இலங்கை தமிழர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.