Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சிவகாஞ்சி காவல் நிலையம் பிரிப்பு எப்போது? அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் 'மூச்!'

சிவகாஞ்சி காவல் நிலையம் பிரிப்பு எப்போது? அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் 'மூச்!'

சிவகாஞ்சி காவல் நிலையம் பிரிப்பு எப்போது? அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் 'மூச்!'

சிவகாஞ்சி காவல் நிலையம் பிரிப்பு எப்போது? அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் 'மூச்!'

ADDED : ஜூன் 28, 2024 10:27 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காவல் துறையின் கீழ் அனைத்து மகளிர், மதுவிலக்கு உட்பட 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், காஞ்சி தாலுகா காவல் நிலையத்தின் கீழ் பரந்துார், ஏனாத்துார், காரை, நீர்வள்ளூர், செவிலிமேடு, ஓரிக்கை என, 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் வருகின்றன.

இந்த பகுதிகளை, காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரால், இரவு நேர ரோந்து, தேசிய நெடுஞ்சாலை வழிப்பறி போன்றவற்றை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், தாலுகா காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, காவல் துறையினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கடந்தாண்டுகளில், அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பியதை தொடர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின், காவல் துறை மானிய கோரிக்கையின்போது, பொன்னேரிக்கரை காவல் நிலையம், 2.58 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என தெரிவித்திருந்தார்.

அவர் அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஆண்டுக்கான மானிய கோரிக்கை அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், பொன்னேரிக்கரை காவல் நிலையம் இன்னும் துவங்கப்படாமலேயே உள்ளது.

இதற்கான அரசாணை பிறப்பித்து பல மாதங்களாகியும், புதிய காவல் நிலையத்துக்கு தேவையான போலீசாரை, பக்கத்து மாவட்டங்களில் இருந்து நியமிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய காவல் நிலையத்துக்கான இடம் ராஜகுளம் அருகே தேர்வு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பொன்னேரிக்கரை காவல் நிலையம், இதுவரை துவக்கப்படாமல் இருப்பது, கிராம மக்கள் மற்றும் போலீசாரிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us