/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி கோப்புகள் தேங்குவதாக புகார் வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி கோப்புகள் தேங்குவதாக புகார்
வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி கோப்புகள் தேங்குவதாக புகார்
வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி கோப்புகள் தேங்குவதாக புகார்
வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி கோப்புகள் தேங்குவதாக புகார்
ADDED : ஜூன் 28, 2024 10:28 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும், நான்கு செயல் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய செயல் அலுவலர், உத்திரமேரூர் பேரூராட்சியின் செயல் அலுவலராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளில் முடக்கம் ஏற்பட்டு வருவதாகவும், செயல் அலுவலர் சரிவர அலுவலகத்திற்கு வராததால், வார்டு பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்க முடியாத நிலை உள்ளதாக, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 5,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஆனால், வார்டுகளில் முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. பேரூராட்சி செயல் அலுவலர் சரிவர அலுவலகத்திற்கு வராததால், இது தொடர்பாக கலந்தாலோசிக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் சொத்து வரி, தொழில் வரி, வணிக வளாகம், குடிநீர் கட்டணம் என, பல்வேறு வரி இனங்களின் வசூல் தொடர்ந்து பாதிக்கிறது.
பேரூராட்சி மக்களின் தேவைகளான வீடு கட்ட அனுமதி வழங்கல், பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெறுதல் போன்றவை கண்காணிக்காத நிலையில், பல்வேறு கோப்புகள் தேக்கமடைந்து உள்ளது.
இதைத் தொடர்ந்து, செயல் அலுவலர் பேரூராட்சி நிர்வாகத்தில் முழுமையாக கவனம் செலுத்தாததால், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பாதித்து வருகிறது.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் முறையாக செயல்படவும், பேரூராட்சி செயல் அலுவலர் முறையாக அலுவலகம் வந்து பேரூராட்சியை நிர்வகிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.