/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குட்கா பொருள் பறிமுதல் ரூ.22 லட்சம் அபராதம் குட்கா பொருள் பறிமுதல் ரூ.22 லட்சம் அபராதம்
குட்கா பொருள் பறிமுதல் ரூ.22 லட்சம் அபராதம்
குட்கா பொருள் பறிமுதல் ரூ.22 லட்சம் அபராதம்
குட்கா பொருள் பறிமுதல் ரூ.22 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 28, 2024 09:48 PM
காஞ்சிபுரம்:புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த மார்ச் முதல், தற்போது வரையிலான நடவடிக்கையில், 1,459 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், 74 கடைகளில் கூலிப், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதில், 272 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 22.05 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குட்கா, கூலிப் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் வீட்டருகே உள்ள கடைகளில் விற்பனை செய்தால், 94984 -10581, 82489 -86885 என்ற 'வாட்ஸாப்' எண்களில் தெரிவிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.