/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மல்லிகாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு மல்லிகாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு
மல்லிகாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு
மல்லிகாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு
மல்லிகாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஜூலை 21, 2024 06:56 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது மல்லிகாபுரம் கிராமம். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு படூர் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை, பூமியில் பதித்த குடிநீர் பைப்பு மூலம் மல்லிகாபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, அப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மின்மோட்டார் பழுது காரணமாக, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அப்பகுதியில் இருந்த சிறு மின்விசை பம்பும் பழுதடைந்த நிலையில், டேங்க் தண்ணீரும் வினியோகிக்காததால், அப்பகுதியினர் குடிநீருக்கு படூர் கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, கேன் குடிநீர் வாங்கி வரும் நிலை உள்ளது.
எனவே, மல்லிகாபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முறையாக தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.