ADDED : ஜூலை 21, 2024 06:58 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் உள்ள ராமலிங்க அடிகள் அருள் நிலையம் சார்பில், வள்ளலாரின் 201வது பிறந்த நாள் விழாவையொட்டி, அருள் விளக்க சொற்பொழிவு நேற்று நடந்தது.
ஆழ்வார் திருநகர் ஞானா சிரியர் பாலு தலைமை வகித்தார். வள்ளலார் வடலுாரில் சங்கம், சபை என தோற்றுவித்து இதனால், மக்களுக்கு உணர்த்துவது என்ற தலைப்பில் ஆய்வு அரங்கம் நடந்தது. முன்னாள் மாநில தலைவர் படப்பை பாலகிருஷ்ணன் நடுவராக பங்கேற்றார். அருள்நிலைய உப தலைவர் ஜோதி கோட்டீஸ்வரன் விழா அறிமுக உரையாற்றினார். செயலர் ராமதாஸ் வரவேற்றார். பொருளாளர் பழனி நன்றிகூறினார்.