/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீர் 'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீர்
'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீர்
'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீர்
'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீர்
ADDED : ஜூலை 21, 2024 06:52 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இருந்து, தாமல்வார் தெரு வழியாக, ஏனாத்துார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. புனிததேவ ஆலயம் அருகே, சாலை நடுவே செல்லும் 'மேன்ஹோலில்' கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என, தடுப்பு போட்டுள்ளனர்.
இந்த தடுப்பு, ஏனாத்துார் மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கிசெல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் தாமல்வார் தெரு, அப்பாராவ் தெரு வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.
சில நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது.
எனவே, கழிவுநீர, 'மேன்ஹோல்' அடைப்பு சரி செய்து, போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, பேரிகார்டு தடுப்பை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.