ADDED : ஜூலை 28, 2024 01:00 AM
காஞ்சிபுரம்:காமாட்சியம்மை திருவாசக முற்றோதல் பேரவை சார்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மன்ற அமைப்பாளர் வசந்தா தலைமையிலான பேரவை குழுவினர், மாணிக்கவாசகர், சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களில், 658 பாடல் வரிகளையும் குழுவினர் முற்றோதல் செய்தனர். முன்னதாக கோவிலில் மாகேஸ்வர பூஜை செய்து வழிபட்டனர்.