Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பொற்பந்தல் ஏரி மதகு சீரமைப்பு பணி தாமதம்

பொற்பந்தல் ஏரி மதகு சீரமைப்பு பணி தாமதம்

பொற்பந்தல் ஏரி மதகு சீரமைப்பு பணி தாமதம்

பொற்பந்தல் ஏரி மதகு சீரமைப்பு பணி தாமதம்

ADDED : ஜூலை 28, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில் ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ், 130 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தை கொண்டு, அப்பகுதியில் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த ஏரியின் 2வது மதகில், 2016ம் ஆண்டு ஓட்டை ஏற்பட்டது. இதையடுத்து, 2020ம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் செலவில் பழுதான மதகு சீரமைக்கப்பட்டது. எனினும் தரமற்ற பணியின் காரணமாக மீண்டும் மதகு பழுதடைந்தது.

எனவே, தரமான முறையில் மீண்டும் ஏரி மதகை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.

அதன்படி, இந்த ஏரி மதகு மீண்டும் சீரமைக்க மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி துவக்கமாக சில நாட்களுக்கு முன், மதகு வாயிலாக ஏரி நீர் வெளியேறாத படி கரையமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பணி ஒப்பந்ததாரரின் மெத்தனபோக்கால் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

தற்போது மதகு வழியாக ஏரி நீர் வெளியேற்றம் தடைபட்டு உள்ளதால், அப்பகுதியில் சொர்ணவாரி பருவத்திற்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது நிலங்களுக்கு பாசன வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

எனவே, ஏரி சாகுபடி நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்க மதகு வாயிலாக தண்ணீர் வெளியேற்ற அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us