ADDED : ஜூன் 08, 2024 11:26 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் சின்னநாரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27. இவர், உத்திரமேரூர் தெற்கு ரெட்டி தெருவில் மொபைல்போன் கடை வைத்து உள்ளார்.
நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்கு வழக்கம்போல கடையை பூட்டிக்கொண்டு மணிகண்டன் வீட்டுக்குச் சென்றார்.
நேற்று, காலை 7:00 மணிக்குதிரும்பு கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 64,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, கடை உரிமையாளர் மணிகண்டன் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.