/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காரில் 'லிப்ட்' கேட்டு வழிப்பறி பெண் உட்பட 4 பேருக்கு வலை மேடவாக்கத்தில் துணிகரம் காரில் 'லிப்ட்' கேட்டு வழிப்பறி பெண் உட்பட 4 பேருக்கு வலை மேடவாக்கத்தில் துணிகரம்
காரில் 'லிப்ட்' கேட்டு வழிப்பறி பெண் உட்பட 4 பேருக்கு வலை மேடவாக்கத்தில் துணிகரம்
காரில் 'லிப்ட்' கேட்டு வழிப்பறி பெண் உட்பட 4 பேருக்கு வலை மேடவாக்கத்தில் துணிகரம்
காரில் 'லிப்ட்' கேட்டு வழிப்பறி பெண் உட்பட 4 பேருக்கு வலை மேடவாக்கத்தில் துணிகரம்
ADDED : ஜூன் 08, 2024 11:26 PM
சென்னை: சென்னை, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் பக்ரிரெட்டி, 35; பொறியாளர். தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேளச்சேரியில் இருந்து வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளிக்கரணை, ரேடியல் சாலை அருகே, 'லிப்ட்' கேட்ட இளம்பெண் ஒருவர், 'தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என மொபைல் போனில் தகவல் வந்தது.
எனவே, உடனடியாக மேடவாக்கம் செல்ல வேண்டும். தயவு செய்து இறக்கி விடுங்கள்' என கெஞ்சியுள்ளார்.
இதை உண்மை என நம்பி, அவர் அந்த பெண்ணை தன் காரில் ஏற்றி கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்துார், விடுதலை நகர், 11வது தெரு வழியாக மேடவாக்கம் சென்றுள்ளார்.
அவரின் காரை பின் தொடர்ந்து, ஆட்டோவில் வந்த மூவர் திடீரென காரை வழிமறித்தனர். பின், கத்தியை காட்டி மிரட்டி கார் சாவியை பறித்துள்ளனர்.
பக்ரிரெட்டி அணிந்திருந்த இரண்டரை சவரன் செயின், மொபைல் போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை - பறித்தனர்.
இதை தடுக்க முயன்றபோது, அவரை தாக்கி காரில் லிப்ட் கேட்டு வந்த பெண்ணுடன் ஆட்டோவில் தப்பி சென்றனர்.
சாலையில் சென்ற சிலர், இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பக்ரிரெட்டியிடம் விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறி செய்த தகவல் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.