புள்ளலுார் எல்லையில் மணல் கடத்தல்
புள்ளலுார் எல்லையில் மணல் கடத்தல்
புள்ளலுார் எல்லையில் மணல் கடத்தல்
ADDED : ஜூன் 24, 2024 05:41 AM

காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் ஊராட்சியில், அத்தி வரதர் நினைவாக நடப்பட்ட நினைவு அத்திமரத்தோட்டம் உள்ளது.
இந்த தோட்டம் அருகே, தண்டலம் கிராமத்தில் இருந்து, விருத சீரநிதி வழியாக, முருங்கை கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் இருக்கும், தரிசு நிலத்தில் மணல் கடத்தல் நடக்கிறது.
குறிப்பாக இரவு வேளைகளில், மண்ணை ஏற்றிக் கொண்டு காட்டு வழியாக லாரிகளில் சென்று விற்பனை செய்வதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் போது, போலீசார் கண்காணிப்பு கிராமங்களில் இல்லாததால் மணல் கடத்தல் ஜரூராக நடந்தது.
இதை கண்காணித்து தடுக்க வேண்டிய காவல் துறையினர், கிராமங்களில் சோதனையில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது
- நமது நிருபர் -.