ADDED : ஜூன் 24, 2024 05:42 AM

சென்னை: செம்பாக்கத்தில் நேற்று நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில், 150 சிறுமியர் உட்பட 600 சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஜி.எம்., செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஆல்பா சர்வதேச மற்றும் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.
இப்போட்டியில், எட்டு, 10, 13, 25 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள்நடத்தப்பட்டன. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 150 சிறுமியர் உட்பட 600 சிறுவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், ஏழு சுற்றுகள் வீதம் மாலை வரை போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 25 இடங்களை பிடித்த சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.