Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக வகுப்பறைகள் புதுப்பொலிவு!: 91 பள்ளிகளில் ஓவியங்கள் வழி பாடம் நடத்த ஏற்பாடு

கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக வகுப்பறைகள் புதுப்பொலிவு!: 91 பள்ளிகளில் ஓவியங்கள் வழி பாடம் நடத்த ஏற்பாடு

கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக வகுப்பறைகள் புதுப்பொலிவு!: 91 பள்ளிகளில் ஓவியங்கள் வழி பாடம் நடத்த ஏற்பாடு

கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக வகுப்பறைகள் புதுப்பொலிவு!: 91 பள்ளிகளில் ஓவியங்கள் வழி பாடம் நடத்த ஏற்பாடு

ADDED : ஜூன் 24, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: கற்றல் குறைபாடுடைய மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு, 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்'களில், எண்கள், எழுத்துகள் ஓவியமாக வரைந்து, ஊரக வளர்ச்சி துறை அசத்தி வருகிறது. இதன் வாயிலாக, முதல் கட்டமாக 91 பள்ளிகளில், மாணவ- - மாணவியரின் கல்வித்திறன் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 450க்கும் மேற்பட்ட அரசு துவக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' என அழைக்கப்படும் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்குவதற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளன.

இந்த பணிக்கு, பள்ளி வகுப்பறைகளுக்கு வண்ணம் பூசி, அதில் விதவிதமான எழுத்துகள் மற்றும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 91 பள்ளிகளுக்கு, 74.61 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதில், துவக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் வகையில் வாய்பாடு மற்றும் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டு உள்ளன.

அதேபோல, நடுநிலைப் பள்ளி மாணவ- - மாணவியருக்கு புரியும் வகையில், எண் கணிதம், வடிவங்கள் வரையப்பட்டு உள்ளன.

இந்த, 'ஸ்மார்ட் கிளாஸ்' வாயிலாக, படிப்பில் பின் தங்கிய மாணவர்களின் கல்வித்திறனும் மேம்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என, ஒருங்கிணைந்த கல்வித் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஊராட்சிகளில் இருக்கும்துவக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு, சுண்ணாம்பு அடித்து பளீச் என வைத்திருப்போம்.

இந்த ஆண்டு, ஸ்மார்ட் கிளாஸ் வந்த பின், வகுப்பறையில் மாணவ - -மாணவியருக்கு பயன்படும் விதமாக, வகுப்பறையில் எண்கள், எழுத்துக்கள், இயற்கை சூழலை அறிந்துக் கொள்ளும் வகையில், ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு கட்டடத்திற்கும், 60,000 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்யலாம் என, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில், வகுப்பறை சூழல் மாற்றும் பணி நிறைவு பெற்று உள்ளது. இந்த கல்வி ஆண்டில் அனைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை அதிகாரி கூறியதாவது:

வகுப்பறையில் எழுதப்படும் எண்கள், எழுத்துகள், இயற்கை ஓவியங்கள் என, பல விதங்களில் எழுதும் போது, மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க வழி வகுக்கும்.

குறிப்பாக, கற்றல் குறைபாடு உடைய மாணவ- - மாணவியருக்கு எப்போதேல்லாம் வகுப்பறைக்கு வருகிறார்களோ அப்போது எல்லாம் படிக்கும் போது, நினைவாற்றல் அதிகரித்து அதிக மதிப்பெண்கள் பெற வழி வகுக்கும். படம் பார்த்து கதைகள் கூறும் போது, பேசும் திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி எண்ணிக்கை

ஒன்றியம் எண்ணிக்கைகாஞ்சிபுரம் 10உத்திரமேரூர் 16வாலாஜாபாத் 23ஸ்ரீபெரும்புதுார் 15குன்றத்துார் 27மொத்தம் 91







      Our Apps Available On




      Dinamalar

      Follow us