Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒரகடம் - குன்றத்துார் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

ஒரகடம் - குன்றத்துார் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

ஒரகடம் - குன்றத்துார் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

ஒரகடம் - குன்றத்துார் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

ADDED : ஜூன் 20, 2024 10:39 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. குன்றத்துார் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் படப்பையிலும், தாலுகா அலுவலகம் குன்றத்துாரிலும் உள்ளன.

இந்த நிலையில், வருவாய்த் துறை சார்ந்த நலத்திட்ட உதவிக்கும், அரசின் பல்வேறு சேவைகளை பெறவும், ஒரகடம் சுற்றுவட்டார கிராமத்தினர் நாள்தோறும் குன்றத்துார் தாலுகா அலுவலகம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரகடம் - குன்றத்துார் இடையே நேரடி அரசு பேருந்து வசதி இல்லை.

இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமத்தினர், இங்கிருந்து தாம்பரம் சென்று, அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து குன்றத்துார் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால், நேரமும், பணமும் விரயமாவதுடன், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, ஒரகடம் - குன்றத்துார் இடையே, படப்பை வழியே அரசு பேருந்து இயக்கம் வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us