/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போதை பொருட்கள் புழக்கம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போதை பொருட்கள் புழக்கம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
போதை பொருட்கள் புழக்கம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
போதை பொருட்கள் புழக்கம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
போதை பொருட்கள் புழக்கம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
ADDED : ஜூன் 20, 2024 10:40 PM
காஞ்சிபுரம்:போதை பொருட்கள் புழக்கம் குறித்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் அறிவுரை வழங்கினர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று நடந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் முன்னிலை வகித்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் விற்பனை செய்தலை, கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல துறையினர் அந்தந்த துறை சார்ந்த உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பலவித ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், கலால் உதவி ஆணையர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.