Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'பம்ப் ஆப்ரேட்டர ் ' மெத்தனம் வட்டம்பாக்கத்தில் குடிநீர் வீண்

'பம்ப் ஆப்ரேட்டர ் ' மெத்தனம் வட்டம்பாக்கத்தில் குடிநீர் வீண்

'பம்ப் ஆப்ரேட்டர ் ' மெத்தனம் வட்டம்பாக்கத்தில் குடிநீர் வீண்

'பம்ப் ஆப்ரேட்டர ் ' மெத்தனம் வட்டம்பாக்கத்தில் குடிநீர் வீண்

ADDED : ஜூலை 11, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:வட்டம்பாக்கம் ஊராட்சியில் அடிக்கடி நிரம்பி வழியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால், குடிநீர் வீணாகி வருவதோடு, தொட்டியின் உறுதி தன்மை பாதிக்கும் சூழல் உள்ளது.

குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாயில் இருந்து இத்தொட்டியில் நிரப்பப்படும் குடிநீர், குழாய் வாயிலாக, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பம்ப் ஆப்ரேட்டர்கள், தொட்டியை முறையாக பராமரிக்காததால், குடிநீர் முழுமையாக நிரம்பி, தொட்டியின் மீது வழிந்து வீணாகி வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி நிரம்பி வழிவதால் குடிநீர் வீணாவதோடு, மின்சாரம் விரயமாகிறது. மேலும், தேவைக்கு அதிகமாக ஓடும் மின்மோட்டார் பழுதடையும் சூழல் உள்ளது.

அதேபோல, குடிநீர் தொட்டியில் மீது நிரம்பி வழியும் தண்ணீரால், தொட்டியின் உறுதித்தன்மை பாதிக்கும் சூழல் உள்ளது.

எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், குடிநீர் நிரப்பும் பம்ப் ஆப்ரேட்டர் முறையாக கண்காணிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us