ADDED : ஜூலை 11, 2024 12:24 AM

பரந்துார்:காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முகப்பில் மட்டுமே கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில், இடது மற்றும் வலது புறம், பின் புறத்தில் போதிய சுற்றுச்சுவர் வசதி அறவே இல்லை.
இதனால், ஆடு, மாடுகள் சுகாதார வளாகத்தில், எளிதாக வந்து சென்றன. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு அச்சம் எழுந்து வந்தன.
தற்காலிக சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
தனியார் பங்களிப்புடன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தற்காலிக கம்பி வேலி அமைத்து உள்ளனர்.
இருப்பினும், சுகாதார வளாகத்தில் மாடுகள் மேய்வதைத் தடுக்க முடியவில்லை என, சுகாதாரத் துறையினர் புலம்பி வருகின்றனர்.