/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டயர் தொழிற்சாலையால் மூச்சு விடுவதில் சிரமம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு டயர் தொழிற்சாலையால் மூச்சு விடுவதில் சிரமம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
டயர் தொழிற்சாலையால் மூச்சு விடுவதில் சிரமம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
டயர் தொழிற்சாலையால் மூச்சு விடுவதில் சிரமம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
டயர் தொழிற்சாலையால் மூச்சு விடுவதில் சிரமம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : ஜூலை 09, 2024 04:00 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று, நடந்தது.
இதில், பல்வேறு கோரிக்கை, புகார்களை, 480 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்புறம், தனியார் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கிருந்து வெளியேறும் நச்சுப்புகை காரணமாக, முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போருக்கு, புகை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
டயர் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வரும் புகையால், வீசிங், சைனஸ் போன்ற நோய் தாக்கும் என, அச்சமாக உள்ளது. எனவே, இந்த டயர் தொழிற்சாலையை, அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நலத்திட்ட உதவி: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 14 பேருக்கு ஈமச்சடங்கு செய்ய, 2.38 லட்ச ரூபாய் நிதியுதவியும், 14 பேருக்கு, 3.24 லட்ச ரூபாய் மதிப்பில் வங்கி கடனும், 4 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் வாரிசுதாரர் பாதுகாவலர் சான்று என, 12.2 லட்ச ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மேலும், கற்றல் -கற்பித்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் தங்களை பெருகேற்றி கொள்ள, 1,165 கையடக்க கணினியும் வழங்கப்பட்டது.
பட்டா: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு தாலுகாவிலும், 200க்கும் மேற்பட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலைகளை பராமரித்து, மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.
கலை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கிற சொற்ப பணத்தில் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து, மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். சிரமத்தில் வாழும் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.