/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திரவுபதியம்மன் கோவிலில் வரும் 21ல் தீமிதி திருவிழா திரவுபதியம்மன் கோவிலில் வரும் 21ல் தீமிதி திருவிழா
திரவுபதியம்மன் கோவிலில் வரும் 21ல் தீமிதி திருவிழா
திரவுபதியம்மன் கோவிலில் வரும் 21ல் தீமிதி திருவிழா
திரவுபதியம்மன் கோவிலில் வரும் 21ல் தீமிதி திருவிழா
ADDED : ஜூலை 09, 2024 04:00 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஜூலை- 21ல் தீமிதித் திருவிழா நடைபெற உள்ளது.
கடந்த- 3ம் தேதி மஹாபாரத சொற்பொழிவு கொடி ஏற்றம், சிவாச்சாரியர்கள் முன்னிலையில், வெகுவிமரிசையாக நடந்தது.
நாளை, மாலை, 6:00 மணி அளவில் ஊவேரி கிராமத்தில் இருந்து, திரவுபதியம்மன் மணக்கோலம் அலங்காரத்தில், கோவிந்தவாடி கிராமத்திற்கு செல்கிறார்.
அன்று இரவு 10:00 மணி அளவில், சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் குழுவினரின் வில் வளைப்பு நாடகம் துவங்குகிறது.
நாளை மறுதினம் காலை, திரவுபதியம்மனுடன் பஞ்ச பாண்டவர்கள் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு, ஊவேரி கிராமத்தில் இருந்து சீர்வரிசை எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று இரவு சுபத்திரை திருமணம் நாடகம் நடைபெற உள்ளது.