/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
வரும் 13ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 09, 2024 04:01 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 13ம் தேதி, காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் தாலுகாவில் காரை கிராமத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில் காவித்தண்டலம் கிராமத்திலும், வாலாஜாபாத்தில் சங்கராபுரம், திருப்பெரும்புதுாரில் பிச்சிவாக்கம், குன்றத்துாரில் பூந்தண்டலம் ஆகிய கிராமங்களில் பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.
பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்வது, நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு அல்லது மாற்றம் செய்ய கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.