/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மதுராந்தகம் சார் - பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு' மதுராந்தகம் சார் - பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
மதுராந்தகம் சார் - பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
மதுராந்தகம் சார் - பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
மதுராந்தகம் சார் - பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
ADDED : ஜூன் 08, 2024 05:58 AM

கடலுார், : மதுராந்தகம் சார் --பதிவாளரின் கடலுார்வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 1.50 லட்சம்ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, பொறுப்பு சார் - பதிவாளர் திலீப் பிரசாத், 40, உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடலுார், பீச் ரோடு, என்.ஜி.ஓ., துரைராஜ் நகரில் வசித்து வரும் மதுராந்தகம் பொறுப்பு சார் - பதிவாளர் திலீப் பிரசாத் வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று காலை 6:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.