/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தி-.மு.க., மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு தி-.மு.க., மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு
தி-.மு.க., மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு
தி-.மு.க., மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு
தி-.மு.க., மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 08, 2024 05:59 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமி, மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதலே, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்களும், மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, சமீபகாலமாக போர்க்கொடி துாக்கி வருகின்றனர்.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு காரணமாக, மாநகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கும் சூழலும் ஏற்பட்டது.
கவுன்சிலர்களுக்கு சேர வேண்டிய 'கமிஷன்' சரிவர வரவில்லை என்ற விமர்சனமும், இதற்கிடையே எழுந்தது. இந்நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சி கவுன்சிலர்கள், 35 பேர், நேற்றிரவு 9:00 மணியளவில், கலெக்டர் கலைச்செல்வியை, கலெக்டர் அலுவலகத்தில் திடீரென சந்தித்து, மனு அளித்தனர்.
மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கலெக்டர் கலைச்செல்வி மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பியுள்ளார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த மேயருக்கு எதிராக, தி.மு.க., கவுன்சிலர்களும் போர்க்கொடி துாக்கியிருப்பது, கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.