/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தோட்டக்கலை பண்ணைகள் மேம்பாடு நிதி குறைவு விளை பொருட்கள் பாதுகாப்பதில் கேள்விக்குறி தோட்டக்கலை பண்ணைகள் மேம்பாடு நிதி குறைவு விளை பொருட்கள் பாதுகாப்பதில் கேள்விக்குறி
தோட்டக்கலை பண்ணைகள் மேம்பாடு நிதி குறைவு விளை பொருட்கள் பாதுகாப்பதில் கேள்விக்குறி
தோட்டக்கலை பண்ணைகள் மேம்பாடு நிதி குறைவு விளை பொருட்கள் பாதுகாப்பதில் கேள்விக்குறி
தோட்டக்கலை பண்ணைகள் மேம்பாடு நிதி குறைவு விளை பொருட்கள் பாதுகாப்பதில் கேள்விக்குறி
ADDED : ஜூலை 06, 2024 10:36 PM
காஞ்சிபுரம்:அதிக வருவாய் தரும் தோட்டக்கலை பண்ணைகள் மேம்பாட்டிற்கு 260 ஏக்கரில் அடிப்படை வசதிகளை அமைப்பதற்கு வெறும் 25 லட்சம் ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த சொற்பமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதால், பண்ணைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தோட்டக்கலை துறை சார்பில், பிச்சிவாக்கம், விச்சந்தாங்கல், மேல்கதிர்பூர், மேல் ஒட்டிவாக்கம் ஆகிய நான்கு பண்ணைகள் இயங்கி வருகின்றன.
தமிழக சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்புகள், துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வந்தன. இதில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு மானியங்கள் அறிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, தோட்டக்கலை பண்ணைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கு, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, வேளாண் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த நிதியை பயன்படுத்தி, தோட்டக்கலை பண்ணைகளில் சொற்பமான வசதிகளை மட்டுமே, ஏற்படுத்தி கொடுக்க முடியும் என, துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பிச்சிவாக்கம் தோட்டக்கலை பண்ணை 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
இதுதவிர, தென்னை உற்பத்தி செய்யும் நாற்றாங்கால் பண்ணையும் உள்ளன. இந்த பண்ணைக்கு, முகப்பு மற்றும் கிராம சாலையோரம் மட்டுமே, கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளன. மீதம் இருக்கும் பரப்பளவிற்கு ஏற்ப, 3,000 மீட்டர் துாரத்திற்கு கம்பி வேலி அமைக்கவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முந்திரி விளைச்சல் நேரத்தில் பழங்கள் திருடு போவது, உற்பத்தி செடிகளை பாதுகாப்பது கேள்விக்குறியாக இருக்கும். அதேபோல, விச்சந்தாங்கல், மேல்கதிர்பூர், மேல் ஒட்டிவாக்கம் ஆகிய பண்ணைகளில், 5,750 மீட்டர் துாரம் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளன.
இதனால், தரமான செடிகளை தோட்டக்கலைத் துறையினர் உற்பத்தி செய்தாலும், அந்த செடிகளை பாதுகாப்பதில் சிக்கல் மற்றும் அதிக மகசூல் எடுத்தாலும் விளைப்பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
குறிப்பாக, பிச்சிவாக்கம், மேல்கதிர்பூர் ஆகிய பண்ணைகளில் முந்திரி பழங்கள் மற்றும் விச்சந்தாங்கல், மேல் ஒட்டிவாக்கம் ஆகிய பண்ணைகளில் செடிகளின் உற்பத்தி மூலமாக ஒரு கோடி ரூபாய் மேல் வருவாய் தருகிறது.இந்த விளைப்பொருட்களை பாதுகாக்கவும், செடிகளின் உற்பத்தியை பாதுகாக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆழ்துளை கிணறு மற்றும் கம்பி வேலி அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
'இருப்பினும், நிதி போதாதுதான். அடுத்தடுத்த ஒதுக்கீடுகளில் அனைத்து பண்ணைகளுக்கும் பாதுகாப்பு வேலி மற்றும் பிற வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்' என்றார்.