/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஒரகடத்தில் வரும் 15ல் தொழில் பழகுனர் மேளா ஒரகடத்தில் வரும் 15ல் தொழில் பழகுனர் மேளா
ஒரகடத்தில் வரும் 15ல் தொழில் பழகுனர் மேளா
ஒரகடத்தில் வரும் 15ல் தொழில் பழகுனர் மேளா
ஒரகடத்தில் வரும் 15ல் தொழில் பழகுனர் மேளா
ADDED : ஜூலை 06, 2024 10:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் மேளா, வரும் 15ம் தேதி, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில், தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு வரை படித்த, இடைநின்ற, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை படித்த, இடைநின்ற மாணவர்களும் தொழில் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்று பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.