/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 5 பதிவாளர் ஆபீஸ்களில் 31,623 பத்திரங்கள் ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு 5 பதிவாளர் ஆபீஸ்களில் 31,623 பத்திரங்கள் ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு
5 பதிவாளர் ஆபீஸ்களில் 31,623 பத்திரங்கள் ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு
5 பதிவாளர் ஆபீஸ்களில் 31,623 பத்திரங்கள் ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு
5 பதிவாளர் ஆபீஸ்களில் 31,623 பத்திரங்கள் ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு ஓராண்டில் ரூ.1,847 கோடி சொத்துகள் பதிவு
ADDED : ஜூலை 06, 2024 10:37 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கீழ் செயல்படும், ஐந்து சார் - பதிவாளர் அலுவலகங்களில், கடந்தாண்டு 31,623 பத்திரங்கள் வாயிலாக, 1,847 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பதிவுத்துறையின் கீழ், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் என, 13 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வந்தன. கடந்த 2021- -- 22ல், மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மறு சீரமைப்பின்போது, சார் - பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டது.
அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் கீழ், 13 சார் - பதிவாளர் அலுவலகங்களை குறைத்து, வெறும் ஐந்து சார் - பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே கொண்டதாக பதிவுத்துறை மாற்றியமைத்தது.
அதாவது, காஞ்சிபுரம் இணை சார் - பதிவாளர் அலுவலகம் 1, இணை சார் - பதிவாளர் அலுவலகம் 2, இணை சார் - பதிவாளர் அலுவலகம் 4, தாமல் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஐந்து பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளதால், இப்பகுதியில் உள்ள நிலங்கள், வீட்டு மனை விற்பனை, விவசாய நிலங்கள் விற்பனை, நிலங்கள் அடமானம் என, ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறக்கிறது.
இதன் காரணமாக, சார் - பதிவாளர் அலுவலகங்களில், நிலங்களின் விற்பனை பத்திரம் பதிவு செய்வதும், அடமானம் வைப்பதும், ஒப்பந்தம் செய்வதும் என பல லட்சக்கணக்கான மதிப்புடை சொத்துக்களை அன்றாடம் பலர் பதிவு செய்கின்றனர்.
அவ்வாறு, 2022- - 23ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கீழ் செயல்படும், ஐந்து சார் - பதிவாளர் அலுவலகங்களில் மட்டும், 31,623 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், கடந்தாண்டு மட்டும் 1,847 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் கைமாறியிருப்பது தெரியவந்துள்ளது.
பதிவுத்துறை தெரிவிக்கும் இந்த, 1,847 கோடி ரூபாய் என்பது அரசு வழிகாட்டி மதிப்பீடு மட்டுமே ஆகும்.
மார்க்கெட் விலைக்கு, இந்த சொத்துக்கள், 5,000 கோடிக்கு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறியிருக்கும் என, முத்திரைத்தாள் எழுதுவோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கீழ், 2021--22ம் ஆண்டில், 13 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கின. அப்போது, 73,228 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 3,300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கைமாறின.
இதிலிருந்து பிரிந்து, தற்போது வெறும் ஐந்து சார் - பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே, காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கீழ் செயல்படும் நிலையில், அதிக மதிப்பிலான சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு கைமாறியுள்ளன.
இதன்மூலம், அரசுக்கு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் என, 11 சதவீதம் கணக்கிட்டால், 167 கோடி ரூபாய்க்கு, கடந்தாண்டு வருமானமாக கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிக எண்ணிக்கையில், காஞ்சிபுரம் இணை சார் - பதிவாளர் அலுவலகம் 1 மற்றும் 2 ஆகிய இரு அலுவலகங்களிலும், லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது.
கிரைய பத்திரம், ஒப்பந்த பத்திரம், அடமானம், வீட்டுக்கடனுக்கான ஒப்பந்த பத்திரம் என எந்த வகையிலான பத்திரங்களை பதிவு செய்ய வேண்டுமானாலும், 5,000 ரூபாய்க்கு குறைவில்லாமல், ஊழியர்கள் வாங்குவதாக, கிரைய பத்திரம் பதிந்த நபர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சுற்றி பரந்துார் விமான நிலைய திட்டத்தை மையமாக வைத்து, ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக நடப்பதால், கடந்தாண்டு பத்திரங்கள் மூலம் கைமாறிய 1,847 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை காட்டிலும், இந்தாண்டு அதிக மதிப்புடைய சொத்துக்கள் கைமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.