ADDED : ஆக 06, 2024 10:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தாலுகாவிலும், கிராமம் வாரியாக குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வரும் 10ம் தேதி, காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் தாலுகாவில் கூரம் கிராமத்திலும், உத்திரமேரூரில் விசூர், வாலாஜாபாத்தில் மாகரல், ஸ்ரீபெரும்புதுாரில் பிள்ளைப்பாக்கம், குன்றத்துாரில் மலையம்பாக்கம் ஆகிய இடங்களில் குறைதீர் முகாம்கள் நடக்க உள்ளன.
இதில், புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்வது, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.