/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது
மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது
மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது
மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது
ADDED : ஆக 06, 2024 02:09 AM

வெள்ளைகேட்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்குவழி சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்கள் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இதில், வெள்ளைகேட் மேம்பாலத்தின் இருபுறமும், கடந்த பிப்ரவரி மாதம் மின் விளக்குகள் பொருத்தினர். இதில், ஒரு சில மின் விளக்குகள் எரியவில்லை.
இதை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க முன்வரவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பெங்களூரு, வேலுார், காஞ்சிபுரம் மார்க்கத்தில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் சென்னை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் இருந்து, வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இருளில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.