Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் அலட்சியம்: குடிநீர் வீணடிப்பு

காஞ்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் அலட்சியம்: குடிநீர் வீணடிப்பு

காஞ்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் அலட்சியம்: குடிநீர் வீணடிப்பு

காஞ்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் அலட்சியம்: குடிநீர் வீணடிப்பு

ADDED : ஜூன் 18, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.

இங்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் மட்டுமின்றி மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்தினர் பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம் கட்டடத்தின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் இருந்து, கட்டடத்தின் கூரையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மருத்துவமனையில் உள்ள பல்வேறு மருத்துவ பிரிவு கட்டடங்களுக்கு குழாய் வாயிலாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், இக்கட்டடத்தின் மேல் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியை முறையாக செய்யாததால், அடிக்கடி தொட்டி முழுமையாக நிரம்பி வழிவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், இக்கட்டடத்தின் அருகில் மர நிழலில் அமர்ந்து உணவு அருந்தும் இடத்தில் குடிநீர் தெளிப்பதால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுபோல நீர்த்தேக்கதொட்டி அடிக்கடி நிரம்பி வழிவதால், குடிநீர் வீணாகுவதோடு, மின்சாரமும் விரயமாகிறது. பல மணி நேரம் இயங்கும் மின்மோட்டாரும் எளிதில் பழுதடையும் சூழல் உள்ளது.

எனவே, மருத்துவமனையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள், இதை முறையாக கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us